இளம் வயது தொடங்கி வாலிப வயது வரையான கதை அமைப்பு கொண்ட படங்களுக்கு அதில் ஜோடிபோடும் நட்சத்திரங்களின் முகசாயலுக்கு ஏற்ப ஜூனியர் நட்சத்திரங்களை தேர்வு செய்ய வேண்டும். விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடிக்கும் புதிய படம் ‘96’. சிறுவயது நட்பு தொடங்கி வாலிப பருவ காதல் வரையிலான கதையாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக விஜய் சேதுபதி, திரிஷா முகசாயலுக்கு பொருத்தமான சிறுவயது கதாபாத்திர நட்சத்திர தேர்வு நடத்தி வருகிறார் இயக்குனர் பிரேம்குமார்.
இதுவரை பலர் தேர்வுக்கு வந்தபோதும் இன்னும் பொருத்தமான முக அமைப்புள்ளவர்கள் கிடைக்காததால் தேடுதலை தொடர்கிறார். ரோமியோ ஜூலியட், கத்திசண்டை, வீரசிவாஜி படங்களை தயாரித்ததுடன் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படத்தை தயாரிக்கும் எஸ்.நந்தகோபால் இப்படத்தை தயாரிக்கிறார். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு, கோவிந்த்மேனன் இசை. இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடக்கஉள்ளது.