வருடாந்திர கத்தோலிக்க விருந்து மற்றும் உலக விலங்குகள் தினத்தையொட்டி தேவாலயங்களில் செல்லபிராணிகளுக்கு சிறப்பு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா மற்றும் பெரு தலைநகர் லிமாவில் உள்ள தேவாலயங்களில் செல்லப்பிராணிகளுக்காக சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற ஏராளமானோர் தங்கள் செல்லப்பிராணிகளை விதவிதமாக அலங்கரித்து உடன் அழைத்து வந்திருந்தனர்.
பெரும்பாலும் நாய்களும் பூனைகளும் அவற்றில் இடம் பெற்றிருந்தன. சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் முடிந்தவுடன் செல்லப்பிராணிகள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

