Sunday, September 21, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

செய்திகளுக்காகச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி

May 28, 2019
in News, Politics, World
0

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் செய்திசேகரிக்க சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் கே .குமணன் மீது கொக்கிளாய் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்குதல் நடத்தப்பட்டு கேவலமாகபேசி அச்சுறுத்தலும்விடுக்கபட்ட சம்பவம் நேற்று மாலை இடம்பெறுள்ளது.

பழையச் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை அமைத்துள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் பிள்ளையார் ஆலயதர்ப்புக்கும் விகாராதிபதிக்கும் இடையில் வழக்கு ஒன்று நடைபெற்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது . இந்த நிலையில் நேற்றையதினம் நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு வழிபாட்டுக்கும் சிரமதான வேலைகளுக்கும் சென்ற செம்மலைகிராம் மக்கள் பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைவாக ஆலய வளவில் வைத்து குற்றவாளிகள் போல் விசாரிக்கப்பட்டதோடு இடையூறுக்கும் உள்ளாகியிருந்தனர் .

இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பில் நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது . இதில் உடனடியாக பிள்ளையார் ஆலயத்துக்கு மட்டும் பௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள இரகசிய கெமராக்களை பொலிஸாரால் அகற்றுமாறும் ஏற்கெனவே தீர்ப்பில் சொல்லப்பட்டதுபோன்று கணதேவி தேவாலயம் என பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவால் எழுதப்பட்ட பெயரை மாற்றி “நீராவியடி பிள்ளையார் ஆலயம் ” என நேற்றையதினமே பெயரை எழுதுமாறு மன்று கட்டளையிட்டிருந்தது .

இதனையடுத்து நீதிமன்றின் கட்டளைப்படி நடைபெறும் வேலைகளை செய்தி அறிக்கையிடுவதற்காக சென்ற சுயாதீன ஊடகவியாளர் க .குமணன் மீது அங்கே கடமையில் இருந்த கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளரை தகாத கெட்ட வார்த்தைகளால் திட்டி புகைப்படக்கருவியை தட்டிவிட்டு தாக்கியதுடன் மிகவும் கீழ்த்தனமான வார்த்தைப்பிரயோகங்களால் திட்டி ஊடகப்பணியையும் கேவலப்படுத்தும் விதமாக நடந்து ஊடகப்பணியை செய்ய விடாது இடையூறை ஏற்படுத்தியிருந்தார் .

தொடர்ந்து அவ்விடத்துக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தகாத வார்த்தைகளால் குறித்த ஊடகவியலாளரை திட்டியதோடு ஊடகவியலாளரின் முகம் முன்பாக சென்று கைத்தொலைபேசியால் புகைப்படங்களை எடுத்து மிரட்டும் விதமாக நடந்ததோடு “பொய்சொல்லும் தமிழ் ஊடகவியலாளர்கள் ” என திட்டியதோடு ஊடகவியலாளரின் பணிக்கும் இடையூறை ஏற்படுத்தியிருந்தார் .

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முல்லைத்தீவு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு ஒன்று குறித்த ஊடகவியலாளரால் வழங்கப்பட்டுள்ளது .

நேற்றுமுன்தினம் குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்துக்கு சென்ற செம்மலைகிராம மக்கள் பௌத்த பிக்குவின் முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் நிலத்தில் இருத்திவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதோடு இடையூறுகளுக்கும் உள்ளாகியிருந்தனர் .

இந்த சம்பவங்கள் தொடர்பில் குறித்த ஊடகவியலாளர் குமணன் செய்தி அறிக்கையிட்டு அவை செய்திகளாக வெளிவந்ததோடு அந்த செய்தி நேற்றையதினம் வழக்கிற்கு ஆதரமாக நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அதன் தொடர்ச்சியான சம்பவங்களை செய்தியாக வெளிக்கொணர சென்ற ஊடகவியலாளர் குமணனுக்கு இவ்வாறு பொலிஸாரால் அச்சுறுத்தலும் தாக்குதலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Previous Post

இராணுவம் மற்றும் விமானப்படையினர் அணியும் சீருடைகளுடன் ஒருவர் கைது

Next Post

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு ஜனாதிபதியினால் மேலும் ஒரு பதவி

Next Post

கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு ஜனாதிபதியினால் மேலும் ஒரு பதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures