இங்கிலாந்தில் பழுதான மின்சார மையம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
அப்போது ஏற்பட்ட அதிர்வில் மின் கம்பங்கள் தீப்பற்றி எரிந்ததால் 40 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டுஷையர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்த கோபுரங்களை இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷயர் நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து 375 அடி உயரம் கொண்ட 3 கோபுரங்களும் வெடி வைத்து நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டன.
இந்நிலையில் கோபுரங்கள் சரிந்து விழுந்த நிலையில் தரையில் ஏற்பட்ட அதிர்வின் காரணமாக ஆயிரம் அடி தூரத்தில் இருந்த மின்கம்பங்கள் வெடித்து தீப்பற்றி எரிந்தன.
இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

