ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இன்று இலங்கை வரவுள்ள நிலையில், அவரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்ய சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிபுதைகுழிக்கு நீதி வேண்டி “அணையா தீபம்” ஏற்றப்பட்டு போராட்டம ஒன்று இன்று (23.06.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அர்ச்சுனா எம்.பி, “இப்போராட்டமானது அரசியலையும் தாண்டி எங்கள் உறவுகளுக்காக நடக்கின்ற போராட்டம்.
மனித உரிமைகள் ஆணையாளர்
ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
முன்னதாக 2011ஆம் ஆண்டும், 2016 ஆம் ஆண்டும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் இலங்கை வந்திருந்தனர். இதில் 2016ஆம் ஆண்டு ஆணையாளரை வடக்கு பகுதிகளுக்கு வரவிடாமல் செய்திருந்தனர்.
அப்போதைய நல்லாட்சி அரசாங்கமும், அதற்கு முட்டுக்கொடுத்தவர்களும் இனப்படுகொலை நடக்கவில்லை என்றே கூறிவிட்டனர். இதன் காரணமாக அவர் அப்போது வடக்கு பகுதிகளுக்கு வந்திருக்கவில்லை.
மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் மீளவும் இன்று இலங்கை வருகின்றார். இம்முறையும் மனித உரிமைகள் ஆணையாளரை வடக்கிற்கு வரவிடாமல் செய்ய உச்சகட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எம்.பி குறிப்பிட்டார்.