செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்ட நாள் நேற்றாகும்.
இந்தப் படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜேர்மன் தலைநகரத்தில் நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் பெர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது தொடர்ந்து நி்னைவுந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது.

