தமிழ் திரையுலகின் வசூல் நாயகனாக திகழும் நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கருப்பு’ எனும் திரைப்படத்தின் டீசர் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நடிகரும் ,இயக்குநருமான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பின் எஸ். ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ் .ஆர். பிரபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசரை சூர்யாவின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் சூர்யாவின் ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதும், சூர்யா சட்டத்தரணியாக தோன்றுவதால் அவர் ஏற்கனவே சட்டத்தரணியாக நடித்து பாரிய அதிர்வலையை ஏற்படுத்திய ‘ஜெய் பீம் ‘ மற்றும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை விட மிகப்பெரிய வெற்றியை பெரும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.