Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூடுபிடித்திருக்கும் தேசியப் பட்டியல் விவகாரம்

August 11, 2020
in News, Politics, World
0

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் சர்ச்சைக்குரியதாகி சூடுபிடித்திருக்கம் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் “தாருஸ்ஸலாம்” தலைமையகம் கடந்த சில தினங்களாக, வடகிழக்கு மாவட்டங்கள் உட்பட ஏனைய சில மாவட்டங்களையும் சேர்ந்த கட்சி ஆதரவாளர்களின் வருகையால் நிரம்பி வழிந்தது.

குறிப்பாக, நடந்து முடிந்த இந்த பொதுத் தேர்தலில் ,பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துள்ள தொகுதிகளிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் தீவிர ஆதரவாளர்கள் குழுக்களாகவும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் சகிதமாகவும் கட்சித் தலைமையகத்திற்கு வந்து கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து தேசியப் பட்டியலில் இடம் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது

9ஆவது புதிய பாராளுமன்ற அமர்வுக்கு முன்னதாக மிகவும் முக்கியமானவையாக கருதப்படும் இந்த நாட்களில் தலைமையகத்திற்கு வந்து செல்லும் தலைவர் ஹக்கீம், தம்மிடம் விடுக்கப்பட்டுவரும் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து வந்ததோடு, செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மற்றும் தமது கட்சி முக்கியஸ்த்தர்களுடன் கலந்துரையாடியுள்ளதாவும் இதேவேளையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேற்று திங்கட்கிழமை மாலை கட்சித் தலைமையகத்தில் மந்திராலோசனையில் ஈடுபட்டிருந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

Previous Post

ரணில் விலகவுமில்லை – கட்சியின் செயற்குழு கூடவுமில்லை

Next Post

கண்டியில் பதவியேற்கவுள்ள அரசாங்கத்தின்புதிய அமைச்சரவை!

Next Post

கண்டியில் பதவியேற்கவுள்ள அரசாங்கத்தின்புதிய அமைச்சரவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures