Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சூடான் நிலத்தகராற்று வன்முறையில் 220பேர் பலி

October 23, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
சூடான் நிலத்தகராற்று வன்முறையில் 220பேர் பலி

சூடானில் இரு குழுக்களுக்கு இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் 200 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சூடான் நாட்டின் தெற்கே புளூ நைல் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கடந்த வாரம் மோதிக் கொண்டனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்தது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு தொடர்புடைய மோதலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் 170 பேர் வரை கொல்லப்பட்டனர் என தகவல் வெளியானது.

இந்நிலையில், சூடான் நிலத்தகராறில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 220 ஆக உயர்ந்துள்ளது. பலர் வன்முறையில் காயமடைந்துள்ளனர் என அல்-மஹி பகுதியில் உள்ள மருத்துவமனையின் தலைவரான அப்பாஸ் மவுசா உறுதிப்படுத்தி உள்ளார்.

இதையடுத்து, கவர்னர் அஹ்மத் அல்-ஓம்டா பாடி, புளூ நைல் மாகாணத்தில் 30 நாட்களுக்கு அவசரகால நிலையை பிறப்பித்து உத்தரவிட்டார்.

Previous Post

வங்கக்கடலில் 12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது

Next Post

மூடப்படும் மதுபானசாலைகள்

Next Post
ஆகஸ்ட் மாதம் முதல் மதுவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

மூடப்படும் மதுபானசாலைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures