ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நடவடிக்கைகளின் ஆரம்பப் பணிகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
குறத்த இடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர முக்கியஸ்தரான நிமல் சிறிபாலடி சில்வா ஆகியோர் வருகைத் தந்துள்ளனர்.
அதேபோன்று மாவட்ட அமைப்பாளர்களும் வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் நிமல் சிறிபால டி சில்வா, கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டோரும் பொதுஜன பெரமுன சார்பில் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான உடன்படிக்கையே இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்குவது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நேற்று வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

