கடந்த ஆண்டு தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் சுவாதி கொலை தான். நீண்ட நாட்களாக இச்செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதில் நெல்லையை சேர்ந்த ராம்குமார் என்பவர் ஒரு தலை காதலால் சுவாதியை கொலை செய்ததாக விசாரணையில் சொல்லப்பட்டது. பின் ராம்குமாரும் சிறையில் மின்வயரை கடித்து தற்கொலை செய்ததாக செய்தி வந்தது.
இன்னும் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் சுவாதி கொலை வழக்கு என்னும் பெயரிலேயே படம் எடுக்கிறார். இவர் விஜயகாந்த் நடித்த உளவுத்துறை என்னும் படத்தை இயக்கியவர்.
சுவாதி கொலை வழக்கு படத்தில் சுவாதியாக ஆயிரா மற்றும் ராம்குமாராக மனோ என்னும் புதுமுகங்கள் நடிக்கின்றனர்.