Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சுழலில் சிக்கிய தென்னாபிரிக்கா ! ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை !

September 8, 2021
in News, Sports
0
இலங்கை – தென்னாபிரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான போட்டி இன்று

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்டஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது.

Maheesh Theekshana struck with his first ball in international cricket, Sri Lanka vs South Africa, 3rd ODI, Colombo, September 7, 2021

இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 67 ஓட்டங்களால் வெற்றிபெற்று இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன.

இதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

Wanindu Hasaranga celebrates a wicket, Sri Lanka vs South Africa, 3rd ODI, Colombo, September 7, 2021

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.

Heinrich Klaasen is all set to complete a spectacular catch, Sri Lanka vs South Africa, 3rd ODI, Colombo, September 7, 2021

இலங்கை அணி சார்பில் சரித்த அசலங்க 47 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் பந்துவீச்சில் கேசவ் மகராஜ் 3 விக்கெட்டுகளையும் ஜோர்ஜ் லின்டி மற்றும் தப்ரய்ஸ் சம்சி ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

204 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Dhananjaya de Silva hangs onto a sharp catch to dismiss Aiden Markram, Sri Lanka vs South Africa, 3rd ODI, Colombo, September 7, 2021

19 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்க அணியின் முதல் 3 விக்கெட்டுகள் சாய்க்கப்பட, அந்த அணி ஓட்டங்களைப் பெறுவதில் தடுமாறியது.

இறுதியில் தென்னாபிரிக்க அணி 30 ஓவரி 125 ஓட்டங்களைப்பெற்று 78 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

தென்னாபிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் கென்றிச் கலசின் 22 ஓட்டங்களையும் ஜனிமன் மலன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மகேஷ் தீக்சன 4 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சாமிர மற்றும் வனிது ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.

http://Facebook page / easy 24 news

Previous Post

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Next Post

இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை

Next Post
அமெரிக்காவில் அதிகரிக்கும், குழந்தை திருமணங்கள்

இலங்கைக்கான பயணத்திற்கு அமெரிக்கா எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures