ஸ்பெயின் நாட்டில் சுற்றுலா சென்ற பெண் ஒருவர் படகில் இருந்து தவறி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்பெயினின் மல்லோர்கா பகுதியில் படகு ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 43 வயதான Christina Louise Marston என்பவரே மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று படகில் இருந்த தமது மனைவியை காணவில்லை என அவரது கணவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த படகும் அதன் சுற்றுவட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்ட பொலிசார், அப்பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கமெராக்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இந்த நிலையில் படகில் இருந்து வெளியே வந்த கிறிஸ்டினா, தவறி விழுந்து இறந்துள்ளது தெரிய வந்துள்ளது.
உடலை மீட்டுள்ள அதிகாரிகள் முன்னதாக பலமுறை குறிப்பிட்ட பகுதி முழுவதும் சோதனை மேற்கொண்டு தோல்வியுற்றனர்.
தற்போது பால்மா பகுதி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மட்டுமின்றி இந்த விவகாரத்தில் எந்த வன்முறையும் நடைபெறவில்லை எனவும் பொலிசார் உறுதி அளித்துள்ளனர்.