இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்குள் நாடளாவிய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 100க்கும் மேற்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 84 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய 120 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லதீபின் நேரடி கட்டளையின் கீழ் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

