தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு தேவையான விதத்தில் அரசாங்கத்தை ஆட்டிக் கொண்டிருப்பதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் கனவை நனவாக்க தான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களும், எதிர்க் கட்சியும் சுமந்திரன் உட்பட யார் யாருடையவும் நடவடிக்கைகள் தொடர்பில் மிக்க அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுமந்திரனின் தாளத்துக்கு ஆடுவதற்கு தயாராக வேண்டாம் என அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

