யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளர்.
குறித்த சந்தேக நபர்கள் மூவரும் இன்று காலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்று நள்ளிரவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.