Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சுந்தர் சி. டைரக்‌ஷனில் ஜெயம் ரவி-ஆர்யா இணையும் ‘சங்கமித்ரா’

January 7, 2017
in Cinema, News
0
சுந்தர் சி. டைரக்‌ஷனில் ஜெயம் ரவி-ஆர்யா இணையும் ‘சங்கமித்ரா’
பல வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், இந்த ஆண்டில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. சுந்தர் சி. கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார். படத்துக்கு, ‘சங்கமித்ரா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், ஜெயம் ரவி-ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.

படத்தை பற்றி டைரக்டர் சுந்தர் சி. கூறியதாவது:-

“இந்த படத்துக்காக ஜெயம் ரவி, ஆர்யா இருவரும் 1½ ஆண்டுகள் ‘கால்ஷீட்’ கொடுத்து முழுமையான ஈடுபாடுடன் நடிக்க இருக்கிறார்கள். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்கிறார்.

பத்ரி வசனம் எழுதுகிறார். என்.ராமசாமி தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் வட இந்தியாவில் பேரரசர்கள் வாழ்ந்த கோட்டைகளிலும், அரண்மனைகளிலும் நடைபெற இருக்கிறது.

நீரிலும், நிலத்திலும் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது. வெற்றி பெற்ற பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தலை சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள், இந்த படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள்

Previous Post

கமல்ஹாசன் குடும்பத்துக்கு ஏற்பட்ட சோகம்

Next Post

ஓய்வு பெற்றும் அடங்காத மெக்கல்லம்: அதிரடி காட்டி பேட்டை இரண்டாக உடைத்தார்!

Next Post
ஓய்வு பெற்றும் அடங்காத மெக்கல்லம்: அதிரடி காட்டி பேட்டை இரண்டாக உடைத்தார்!

ஓய்வு பெற்றும் அடங்காத மெக்கல்லம்: அதிரடி காட்டி பேட்டை இரண்டாக உடைத்தார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures