அமைச்சர் மகிந்த அமரவீர சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி பொது எதிரணியுடன் சேராமல் சுயாதீனமாக இயங்கப்போவதாக கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மறைமுகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை மேம்படுத்துவதற்கு உதவி செய்கிறார்கள் எனக் கூறியுள்ளார். அத்துடன் அரசிலும் இல்லாமல், எதிரணியிலும் இல்லாமல் தனியாக இடை நடுவில் நிற்கப்போகும் அவர்களின் நிலை திரி சங்கு சொர்க்க நிலைக்கு சமமானதாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.