Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுஜித்தின் சடலத்தை கண்ணில் காட்டியிருக்கலாம்: பெற்றோர் ஆதங்கம்

November 1, 2019
in News, Politics, Sports
0

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ் (30). இவரது மனைவி கலாமேரி (25).

இவர்களது 2வது மகன் சுஜித்வில்சன் (2). இவன் கடந்த 25ம் தேதி மாலை 4. 30 மணியளவில் வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.

பலநூறு பேர் தீவிரமாக போராடியும் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5ம் நாள் அதிகாலை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான்.

பின்னர் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து குழந்தை விழுந்த இடத்தில் தயாராக வைத்தனர்.

தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சடலத்தை மீட்டதாக கூறி புளு கலர் பிளாஸ்டிக் கவரில் வைத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சவப்பெட்டியில் வைத்தனர்.

உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு ெசல்லப்பட்டு ஆவராம்பட்டி அருகே உள்ள பாத்திமாபுதூர் கிறிஸ்தவ கல்லறையில் காலை 8 மணியளவில் குழந்தை சுஜித் உடல் இருந்த சவப்பெட்டியை நல்லடக்கம் செய்தனர். சுஜித்தின் உடல் முழுமையாக மீட்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது சுஜித் தவறி விழுந்து இறந்த ஆழ்துளை கிணற்றில் மகனின் உடல் இருப்பதாக கூறி மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி பெற்றோர் வணங்கி வருகின்றனர்.

சுஜித்தின் தாய் கலாமேரி கூறியதாவது: கடந்த 25ம் தேதி மாலை 4. 30 மணியளவில் என் பெரியமகன்தான் சுஜித் விழுந்த இடத்தை காட்டினான். நான் மீட்க முயற்சித்தேன்.

முடியவில்லை. குழந்தை தவித்ததை பார்த்து கதறினேன்.

பலரும் வந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். கடைசியாக துர்நாற்றம் வருகிறது என்று சொன்னார்கள்.

எங்களால் கண்ணீர் வடிக்கதான் முடிந்தது. சரி உடலையாவது மீட்டு தாருங்கள் என்றேன்.

அவர்களால் முடிந்த அளவுக்கு சுஜித்தின் உடலை மீட்டனர். ஆனால் முழுமையாக சுஜித் உடலை எங்களிடம் காட்டவில்லை.

இன்னும் அந்த குழிக்குள் சிதைந்த சுஜித்தின் உடல் இருக்கிறது. அதனால்தான் அங்கு மாலை போட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வணங்குகிறோம்.

இறந்த சுஜித்துக்கு 16ம் நாள் காரியம் மற்றம் 30ம் நாள் காரியம் முடிந்த பின், அவன் சிக்கி இறந்த ஆழ்துளை கிணற்றில் சிலுவை நட்டு எங்கள் வசதிக்கேற்ப நினைவு ஆலயம் எழுப்ப முடிவு செய்துள்ளோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு ஆறுதல் கூற வந்தபோது நான் ப்ளஸ்2 முடித்துள்ளேன். எனது கணவர் 10ம் வகுப்பு படித்து கட்டிட தொழிலுக்கு செல்கிறார்.

எங்களுக்கு ஏதேனும் அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆவண செய்வதாக முதல்வர் கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ் கூறும்போது, 29ம் தேதி அதிகாலை அவனது உடலை எடுப்பதாக கூறிய அதிகாரிகள் உடலை எடுப்பதை பார்க்க விடவில்லை. உங்கள் மகன் உடல் நீங்கள் பார்க்கும் நிலையில் இல்லை என கூறி எங்களை அங்கு இருக்க வேண்டாம் என்றனர்.

கடைசி வரை எனது மகன் சடலத்தை எங்களுக்கு அதிகாரிகள் காட்டாமல் ஏமாற்றி விட்டனர்.

ஆழ்துளை கிணற்றில் மோட்டார் விழுந்து விட்டால் இந்த பகுதியில் பிரபலமான சந்தியாகு என்பவரை அழைத்து மீட்போம். மீட்பு குழுவினரிடம் கூறியும் அவரை அனுமதிக்கவில்லை.

சந்தியாகுவை அனுமதித்திருந்தால் சுஜித்தை காப்பாற்றி இருக்கலாம்.

இதைத்தான் பொதுமக்களும் கூறி வருகின்றனர் என்றார்.

Previous Post

வெற்றி பெற்ற புதிய அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

Next Post

நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்- ஜனாதிபதி

Next Post

நாடு வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்- ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures