தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் பிரம்மானந்தம்.. காமெடியில் எத்தனை வெரைட்டி காட்டமுடியும் என்பதை டோலிவுட் ரசிகர்கள் அறிந்துகொண்டது இவர் படம் மூலம் தான்.. தெலுங்கு சினிமாவின் கவுண்டமணி என்று சொல்லும் அளவுக்கு ஒரு படத்தில் இவர் நடிக்கிறார் என்றால் அந்தப்படத்தின் வியாபாரமே வேறு. தமிழில் ‘மொழி’ படம் மூலமாக ரசிகர்களுக்கு நெருக்கமானவர். இயக்குனர் ராதாமோகன் படங்களில் கதைக்கு அடுத்ததாக தவறாமல் இடம் பிடித்தவரும் கூட.
ஆனால் இனிவரும் நாட்களில் பிரம்மானந்தம் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழு நேரமும் சீரியலில் தான் கவனம் செலுத்த போகிறார் என ஒரு தகவல் வெளியாகி தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. .சமீபத்தில் தான் சிறிய அளவிலான இதய அறுவை சிகிச்சையும் இவருக்கு நடந்தது. அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்துவிட்டாராம். அதற்கேற்ற மாதிரி, தன்னை முக்கிய கதாபாத்திரமாக வைத்து தினசரி ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவும் இசைவு தெரிவித்து விட்டாராம் பிரம்மானந்தம்.. ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் இந்த சீரியல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம்.

