நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 13 மாவட்டங்களில் 18 ஆயிரத்து 840 குடும்பங்களை சேர்ந்த 64 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், 5 ஆயிரத்து 255 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 766 பேர் 132 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் இதுவரை 62 வீடுகள் முற்றாகவும் ஆயிரத்து 463 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் 43 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கந்தளாய் குளத்தின் 6 வான்கதவுகள் நேற்று முதல் திறந்துவிடப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம், யான் ஓயா நீர்த்தேக்கத்தின் ஜந்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

