சீனா அதிபர் ஜீ ஜின்பிங் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பல்வேறு தடைகளால் வடகொரியா திடீரென சமரச முயற்சிக்கு இறங்கி வந்துள்ளது. வடகொரிய அரசின் பிரதிநிதிகள் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தனர். வடகொரிய அதிபர் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அவர்கள் தெரிவிக்க அதிபர் டிரம்பும் அதனை ஒப்புக்கொண்டார். இரு நாட்டு அதிபர்களும் வருகிற ஜூனில் சந்திக்க உள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை டாலியன் நகரில் சந்தித்து பேசினார். இதை அமெரிக்க அதிபரும் வரவேற்றுள்ளார்.