சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள லிஜியகோ சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் பரிதாபமாக சம்பவ இடத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
மற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.