சீனாவின் குயிங்டாவ் நகர் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது செயலர் ரஷித் அலிமோவை சந்தித்து பேசினார்.
வறவேற்பு
சீனாவின் குயிங்டாவ் நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இந்த அமைப்பில் கடந்த ஆண்டு முழு உறுப்பினராக இந்தியாவும், பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டன. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி, ஏர் இந்தியா விமானம் மூலம் சீனா கிளம்பினார். குயிங்டாவ் சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவிற்கான சீன தூதர் லு ஜோஹியு, ஷாங்டாங் மாகாண துணை கவர்னர் ரென் ஏரோங், குயிங்டாவ் துணை மேயர் ஜாங் டெபிங் ஆகியோர் வரவேற்றனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜிங்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமர் புடின் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.