சீனாவிற்கு விஜயம் மேற்கொண்;டுள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இருநாடுகளிற்கும் இடையிலான நுண்மையான நட்புறவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இருநாடுகளிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்விற்காக வெளிவிவகார அமைச்சர் சீன தலைநகர் சென்றுள்ளார்.
சீனாவிற்கான அவுஸ்திரேலிய தூதுவரும் சீன வெளிவிவகார அமைச்சரும் அவரை வரவேற்றுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் இருநாடுகளும் தீர்வை காணவேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலத்தின் பின்னர் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்வது சிறந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு முக்கியமான பல விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு ஆர்வமாக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதே வெற்றி என தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வை காணவேண்டிய பல விடயங்கள் உள்ளன,இவற்றிற்கு தீர்வை காண்பதற்கு பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியர்களிற்காக நான் தொடர்ந்தும்குரல்கொடுப்பேன் வர்த்தக தடைகள் நீக்கப்படுவது இரு நாடுகளினதும் நலன்களிற்கு உகந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.