ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற 10 ஆயிரம் பேர் கொண்ட துணை ராணுவப் படையை களமிறக்க சீனா முடிவு செய்துள்ளது.
ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவிற்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் முறைக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் அதிகமாக அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் ஹாங்காங் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு 10 ஆயிரம் பேர் அடங்கிய துணை ராணுவப்படையை ஹாங்காங் எல்லைப் பகுதியான ஷென்ஷன் (Shenzhen) என்ற இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கலவரத் தடுப்பு ஒத்திகையில் துணை ராணுவப் படையினர் ஈடுபடும் வீடியோவையும் சீனா வெளியிட்டுள்ளது.