சீனாவின் காலனியாக மாற போகும் ஹம்பாந்தோட்டை
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீனாவின் சைனா மேர்ச்சன்ட் நிறுவனம் சுமார் 10 லட்சம் சீனப் பிரஜைகளை இலங்கைக்கு அழைத்து வர சீன அரசின் ஊடாக வீசா கோரி விண்ணப்பித்துள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக சீனாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் தனியான பிரிவு ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் வீசாக்கள் விநியோகிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படி இருந்த போதிலும் 10 லட்சம் சீன பிரஜைகளுக்கு வீசா வழங்க இணங்கியதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு இலக்கை அடைய முடியாத ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
உத்தேச சீன வர்த்த வலயத்தில் 4 லட்சம் தொழில் வாய்ப்புகள் உருவாகும் என வெளிநாட்டு வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம கூறியிருந்த போதிலும் சீன பிரஜைகளுக்கு ஒதுக்கப்படும் தொழில்களை தவிர்த்து அதனை கூறினாரா என்பது பிரச்சினைக்குரியது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வீசா வழங்கும் போது தொழில் தன்மை உட்பட சில நியமங்களை இலங்கை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும். அப்படியில்லை என்றால், நாட்டில் தொழில் வாய்ப்பு பிரச்சினை உக்கிரமடையும் என்பது குறித்த வர்த்தக வலயத்தின் ஊடாக அரசாங்கம் எதிர்பார்த்த பிரதிபலன் கிடைக்காது போகும்.
உரிய வீசா கட்டுப்பாடுகள் இன்றி சீனர்களுக்கு வீசா அனுமதிகளை வழங்கினால், இந்தியாவுடன் செய்து கொள்ள இருக்கும் உடன்படிக்கை சம்பந்தமாக தவறான முன்னுதாரணத்தை கொடுக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.