கடந்த 2016ஆம் ஆண்டு 229.5 மில்லியன் டொலர் மொத்த மதிப்பீட்டில் சீனாவினால் மேற்கொள்ளப்படும் அத்தனகல மற்றும் மினுவாங்கொட நீர் விநியோக திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த திட்டத்துக்கு சீன அரசாங்கம் 85 வீத நிதியையும், இலங்கையின் வங்கி ஒன்று கடன் அடிப்படையில் 15 வீத நிதியை வழங்குகிறது.
இதற்கமைய, இந்தத் திட்டத்துக்காக இலங்கையின் திரைசேரி ஏற்கனவே 8.77 மில்லியன் டொலர்களை விடுவித்துள்ளது.
எனினும், குறித்த திட்டத்துக்கு அதிக விலைக்கோரலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, இந்தத் திட்டத்தை இடைநிறுத்தி, அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.