இலங்கையில் சீனாவின் கடன்பொறி தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அடுத்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வுள்ளது என்று தெரியவருகின்றது.
ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொஹோஸ்லாவ்ஸ்கி இந்த ஆண்டு இலங்கை வந்திருந்தார். அவர் வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலவரங்களை ஆராய்ந்திருந்தார்.
மனித உரிமைகளில் வெளிநாட்டுக் கடன்களின் தாக்கம் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி – மார்ச் கூட்டத் தொடரில் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
இது தொடர்பாக ஐ.நாவின் சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொஹோஸ்லாவ்ஸ்கியின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிடுகையில்,
இந்த அறிக்கை பேரவையின் அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்படும். அதற்கு முன்னதாக, பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனாவின் கடன் பொறியே காரணம் என்று குற்றம்சாட்டப் பட்டு வரும் நிலையில் இந்த விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் விவா திக்கப்படவுள்ளது.