சீனப்புத்தாண்டுக்கு பிறகு நடைபெறும் விளக்கு திருவிழா தைவான் கிராம மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தைவானில் விளக்குத் திருவிழாவை யொட்டி தைவானில் கிராமங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.
இக்கிராம மக்கள் தொலைவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு, தாங்கள் நலமாக இருப்பதை உணர்த்தும் வகையில் வானில் வண்ண விளக்குகள் பறக்க விடுவதை பாரம்பரிய வழக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் இந்த விளக்கு திருவிழாவின் மூலமாக அனைவரும் நலமாக வாழ பிரார்த்தனை செய்தும், மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் எனவும், தங்கள் குடும்பத்தோடு விளக்குகளை வானில் பறக்க விடுகின்றனர்.
பின்பு இந்த திருவிழாவை, சீனப்புத்தாண்டு பிறந்து 15 நாட்களுக்கு பிறக்கு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் இந்த திருவிழாவை ஒட்டி தைவானின் பிங்சி மாவட்ட கிராமங்களும் வண்ண ஒளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் கிராம மக்களுடன் சேர்ந்து விளக்குகளை வானில் பறக்கவிட்டு மகிழ்கின்றனர்.