மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட பொதுஜன பெரமுனவின் தேசிய பிரதி அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.அமரசிங்க, ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் ரணசிங்க, நிமால் லங்கஷா ஆகியோர் மட்டு.சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் முதலமைச்சரை பார்வையிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் நலன் விசாரித்த அவர்கள், கலந்துரையாடலிலும் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த சந்திப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

