Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலில் ஜனாதிபதி செயற்படுகின்றாரா |செல்வராஜா கஜேந்திரன்

August 30, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலில் ஜனாதிபதி செயற்படுகின்றாரா |செல்வராஜா கஜேந்திரன்

தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்கும், , தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் ஒரு நிலைமையை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க ஒரு சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் செயற்படுகின்றாரா என்ற சநதேகம் தோற்றம் பெற்றுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சபையில் தெரிவித்தார்.

அமைச்சின் இணையத்தளத்தில் மீண்டும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உள்வாங்கப்பட வேண்டும். பதிவாளர் நாயகத்தினால் காணிப்பதிவுகளை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ள கடிதம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்குரிய கணக்காளர் நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.இல்லாவிடின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வீதியில் இறங்குவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலம் குறிப்பிட்டதாவது,

ஒட்டு மொத்த வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.. கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக பிரிவானது 89 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 93 ஆம் ஆண்டில் அது பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாக அது ஒரு பிரதேச செயலகமாக செயற்பட்டுவருகின்ற நிலையில் இன்று வரைக்கும் அந்த பிரதேச செயலகத்துக்குரிய கணக்காளர் நியமனம் இடம்பெறவில்லை.

.அதற்காக மக்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில் கடந்த வாரத்திலிருந்து பொதுநிர்வாகஇஉள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள் ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தின் ”பிரதேச செயலகம்”என்ற பிரிவிற்குள்ளிருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் பெயர் நீக்கப்பட்டு கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தோடு உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்மக்களுக்குமிடையில் திட்டமிட்ட வகையில் ஒரு பகைமையை வளர்க்கின்ற நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகும்.அமைச்சரவை தீர்மானத்தின் மூலமாக பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த நிலையில் யாருடைய அனுமதியோடு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள் ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தின் ”பிரதேச செயலகம்”என்ற பிரிவிற்குள்ளிருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் பெயர் நீக்கப்பட்டது?

தமிழ் மக்களுக்கும்,முஸ்லி ம் மக்களுக்குமிடையில் பகைமையை வளர்ப்பதற்காக கடந்த காலங்களில் அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் சில செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் பிரதமராக இருந்தபோது ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வழங்கிய ஒரு வாக்குமூலத்திலே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் முரண்பாட்டை உருவாக்குவதற்காக முஸ்லிம் இளைஞர்கள் சிலர் பயன்படுத்தப்பட்டார்கள் என்ற விடயத்தை வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.

அதேபோன்றதொரு செயற்பாடுதான் ரணில் விக்கிரமசிங்க ஜனா திபதியாக வந்த பின்னரும் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வியுள்ளது. ரணில் ஜனதிபதியாக வந்த பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அவரை சந்தித்துள்ளது. அப்போது தாம் இந்த கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் பேசியதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் கூறுகின்றனர். அதற்கு பின்னரும் இவ்வாறான விடயங்கள் நடைபெறுகின்றன என்றால் இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்கும் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் ஒரு நிலைமையை உருவாக்குவதற்கும் ஒரு சில இனவாத முஸ்லி ம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் இவ்வாறு செயற்படுகின்றாரா?

பொதுநிர்வாக,உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள் ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தின் ”பிரதேச செயலகம்”என்ற பிரிவிற்குள்ளிருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் பெயர் நீக்கப்பட்டமை இனவாத செயற்பாடு. அமைச்சுக்கு பொறுப்பான பிரதமர் தினேஷ் குணவர்தனதான் இந்த நடவடிக்கைக்கு அனுமதி கொடுத்தாரா என அவரிடம் இங்கு கேட்கின்றேன். இது பிரதமராக நீங்கள் செய்யும் காரியமா?இங்கிருக்கும் நீதி அமைச்சருங்கவனத்துக்கும் இந்த விடயத்தை நான் கொண்டு வருகின்றேன்.

தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்தும் இந்த முயற்சி உடனடியாக நிறுத்தப்பட்டு உடனடியாக அமைச்சின் இணையத்தளத்தில் மீண்டும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உள்வாங்கப்பட வேண்டும். அதேபோன்று பதிவாளர் நாயகத்தினால் காணிப்பதிவுகளை கல்முனை தெற்கு பிரதேச செயலகத்திடம் ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக்கடிதம் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துக்குரிய கணக்காளர் நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவற்றை உடனடியாக செய்யத்தவறினால் வடக்குஇகிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கு ஆதரவாக அந்த மக்களோடு இணைந்து நீதிகிடைக்கும் வரை வீதியில் இறங்கி போராடவுள்ளோம் என்றார்.

Previous Post

சர்வதேச நாணய நிதியம் பலவந்தமாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை | அலி சப்ரி

Next Post

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான ஜனாதிபதியின் உரை இன்று

Next Post
ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் மீதான ஜனாதிபதியின் உரை இன்று

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான ஜனாதிபதியின் உரை இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures