மொனராகலை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிறைச்சாலையிலுள்ள விளக்கமறியல் பிரிவின் கழிப்பறையில் குறித்த கைது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது சாரத்தில் உள்ள பட்டித் துண்டொன்றின் உதவியுடன் அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 45 வயதான யல்கும்புர பிபில பிரதேசத்தைச் சேர்ந்த வாசல ஆரச்சிகே தொன் மதுபால ரஞ்சித் என்பவரே உயிரிழந்துள்ளார். மரண விசாரணை இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.