சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
தேசத்தின் உயிர்நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்துஇ அவர்களது உளஇ உடல் விருத்திக்கு சிறந்த சூழலைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கேற்ப நடைமுறைப்படுத்தப்படும் இந்த ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு இன்று (18) முற்பகல் 10.00 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.
சிறுவர் சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்கி, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலகத்தினால் ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சமூகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பல்வேறு சீரழிவுகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து துஷ்பிரயோகங்களைத் தடுத்தல்,பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசணை, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளினூடாக நாடளாவிய ரீதியில் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
சுகாதாரம், கல்வி,உளவியல் ஆலோசனைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட பல துறைகளின் ஊடாக பிள்ளைகளை வலுவூட்டுவதற்கு இச்செயற்திட்டத்தின் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டத்தின் கீழ் ‘எதிர்காலத்தை வெல்லும் பிள்ளைகள்’ என்ற ஆளுமை வளர்ச்சிக்கான செயற்திட்டமும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகிசிறுவர்களை பாதுகாப்போம் தேசிய செயற்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறவுள்ளன.
கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு மைதானத்தை மாணவர்களிடம் கையளித்தல்இ சிறுவர் இல்லங்களிலும் தடுப்பு இல்லங்களிலும் வசிக்கும் பிள்ளைகளுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்துவதற்காக வட மாகாணத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர் இல்லங்களையும் தடுப்பு இல்லங்களையும் நவீனமயப்படுத்தி புனரமைப்பு செய்வதற்கு நிதி வழங்குதல், விசேட தேவையுடைய பிள்ளைகள் கல்விகற்கும் வடமாகாணத்தில் உள்ள 25 பாடசாலைகளுக்கு பாதை வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நிதி வழங்குதல். சிறுநீரக நோயிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக சுத்தமான குடிநீர் வசதியற்ற 1000 குடும்பங்களுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்குதல், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்பள்ளிகளுக்கு புத்தக பொதிகள்,மரத் தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்,பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் இன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளன.
அத்துடன், உளவள ஆலோசனை, சட்ட ஆலோசனை மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை என்பனவும் வைபவ வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

