வடக்கினில் இலங்கை இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம்,வாழ்வாதார உதவிகள்,பாடசாலை சிறார்களிற்கான கல்வி உதவிகள் அனைத்தும் இளம் சமூகத்திடையே படையினர் தொடர்பினில் நம்பிக்கையினை தோற்றுவிக்கும் முயற்சியென சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
பலாலியினில் படை அதிகாரிகளிடையே உரையாற்றுகையினில் அதனை அவர் தெரிவித்துள்ளார்.சில படையினரிடையே கேள்வி உள்ளது.ஏன் எமது பகுதிகளை விட்டு தமிழர்களது வடக்கினில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம்,வாழ்வாதார உதவிகள்,பாடசாலை சிறார்களிற்கான கல்வி என்பவை தொடர்பினில் சந்தேகம் உள்ளது.உண்மையினில் தமிழ் குழந்தைகளது அடுத்த பரம்பரையினில் படையினர் தொடர்பான நம்பிக்கையீனத்தை தோற்றுவிக்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் வடக்கு- தெற்கு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை, சில சக்திகள் குழப்பி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள மக்கள் தீவிரவாதத்தை நிராகரித்துள்ளனர். வடக்கு-தெற்கு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு சிறிலங்கா இராணுவம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் சமூகங்களுக்கிடையில் நட்புறவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஆனால், சில குழுக்கள், இரண்டு தரப்புகளுக்கும் இடையில் பதற்றத்தை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தை குழப்பவும் முயற்சிக்கின்றன.
படையினரில் யாராவது குற்றம் செய்திருந்தால், அவர்கள் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்பட வேண்டுமென வழமை போலவே அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

