மலேசியாவில் விளையாட்டிற்காக 4 வயது சிறுவனை வாஷிங் மெஷினுள் அடைத்து வைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மலேசியாவின் தமன் சென்டோசாவில் உள்ள கடைக்கு அங்கு தாய் அவரது நான்கு வயது மகன் மற்றும் மாமா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது மாமா விளையாட்டிற்காக சிறுவனை அங்கிருக்கும் வாஷிங் மெஷினுக்குள் வைத்து அடைத்துள்ளார்.சிறுவனை அதன் பின் வெளியில் எடுக்க முடியவில்லை. இதனால் பதற்ற மடைந்த அவரது மாமா மற்றும் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக அருகிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வந்து சிறுவனை காப்பாற்ற போராடி சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளனர்.இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.மேலும் அவரின் மாமா, சிறுவனின் அம்மாவை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக விளையாட்டிற்கு செய்தது, இப்படி நடந்துவிட்டது, என கூறியுள்ளார்.

