கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் மற்றும் தர்மபுரம் பகுதிகளை சேர்ந்த 23 முதல் 26 வயதான இளைஞர்களே நேற்று இரவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
ஏலவே இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

