பாரிய இலக்குடன் செயற்படும் போது சிறு சம்பவங்களை வைத்து அதிரடித் தீர்மானம் எடுப்பது தவறானது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்பவற்றை இலக்கு வைத்து கட்சியின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கட்சியிலுள்ள கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் அரவணைத்து கட்சியைக் கட்டியெழுப்புவதே தமது எதிர்பார்ப்பு.
இந்நிலையில் கூட்டு எதிர்க் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களுடன் முரண்படுவது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை அல்ல. அவர்கள் இதுவரை ஸ்ரீ ல.சு.க.யில் தான் இருக்கின்றர். வேறு ஒரு கட்சியில் அங்கத்துவம் எடுத்தால் அது குறித்து கவனம் செலுத்தலாம் என்றே தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார்.