சிறிய கட்சிகளை சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் அரசாங்கத்தில் இணைந்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது.
புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒருவர் தனக்கு ராஜாங்க அமைச்சர் பதவியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுள்ளதுடன், ஏனைய இருவர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணத்திற்கான அபிவிருத்திக்கு உதவுமாறு கோரியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு தற்போது நாடாளுமன்றத்தில் 150 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இவர்களின் சபாநாயகரை நீக்கினால், 149 பேரின் ஆதரவு உள்ளது.
இந்த நிலையில் மேற்கூறிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலிலும், ஏனைய சிலர் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு முன்னரும் அரசாங்கத்துடன் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.