சிரிய இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் யாழ் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் இளைஞர்கள் கலந்துகொண்டு சிரியாவில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் எனக் கோசம் எழுப்பினர்.
இதனை வெளிப்படுத்தும் பல சுலோகங்ககளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.