சிரியா போர் குறித்த சில (பழைய ) தவறான புகைப்படங்கள்
கடந்த சில தினங்களாக சிரியா குறித்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ம் திகதி சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் படைக்கும், வெளிநாட்டு உதவியுடன் இயங்கி வரும் ஆயுதக்குழுவினருக்கும் இடையே உள்நாட்டு போர் தொடங்கியது. குறிப்பாக அமெரிக்க ஆதரவுடன் ஆயுதக்குழுவினர் சிரிய அரசு படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆயுதக்குழுவினரின் பின்னனியில் இருந்து தாக்குதலை முன்னெடுத்து வரும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரிய அரசு ரஷ்யா ஆதரவுடன் கிழக்கு கூட்டாவில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்னர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி குழந்தைகள் என்ற தகவல்கள் வெளியாகி வண்ணம் உள்ளது. இதுகுறித்து புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சிரியாவின் நிலையை பாருங்கள் என உலாவரு ம்புகைப்படங்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல என்று பிபிசி நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது- அந்தப்படங்கள் இவையே ..