வாக்குகள் பிளவுபட்டமையே நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் வெற்றிக்கு காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவரும் ஒன்றுபட்டு, அடுத்த பொதுத் தேர்தலிலும் பழையபடி எமக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த அணியினர் அதிக வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை. மஹிந்தவிற்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிளவுபட்டதனாலேயே அவருக்கு கூடுதல் வாக்குகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன எனத் தெரிவித்தார்.