Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்கள மக்கள் சந்தேகித்தால்- தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

August 1, 2018
in News, Politics, World
0
சிங்கள மக்கள் சந்தேகித்தால்- தமிழ் மக்களுக்கு தீர்வில்லை

13ஆவது திருத்­தச் சட்­டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப டுத்­த­வேண்­டும். இத­னூ­டாக தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­ னைக்­குத் தீர்வு காணப்­ப­ட­வேண்­டும். எந்­த­வொரு செயற்பா­டாக இருந்­தா­லும் பெரும்­பான்­மைச் சிங்­கள மக்­க­ளுக்கு சந்தே­கம் ஏற்­ப­டாத வகை­யில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டும்.

இவ்­வாறு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 16 பேர் கொண்ட குழு­வைச் சேர்ந்த உறுப்­பி­னர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது,
–
புதிய அர­ச­மைப்பு வெளிப்­ப­டை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டும். அதனை மறைத்­துச் செயற்­ப­டுத்­து­வ­தன் ஊடாக பெரும்­பான்­மைச் சிங்­கள மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் ஏற்­ப­டும். சிங்­கள மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கம் ஏற்­பட்­டு­விட்­டால் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்தை நகர்த்த முடி­யாது. அனைத்­துத் தரப்­பி­ன­ரும் அவ­தா­ன­மாக இருக்­க­வேண்­டும்.

தற்­போ­தைய நில­மை­யில் அரசு முன்­னெ­டுக்­கப்­ப­டும் புதிய அர­ச­மைப்­புத் தயா­ரிக்­கும் பணி­க­ளா­னது பெரும்­பான்மை சிங்­கள மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கத்தை தோற்­று­விப்­ப­ன­வாக அமைந்­துள்­ளது.இந்­தச் செயற்­பா­டு­களை வெளிப்­ப­டை­யாக முன்­னெ­டுக்க வேண்­டும் என்று நான் வலி­யு­றுத்­தி­னேன். நாடா­ளு­மன்­றத்­தில் நான் இந்த விட­யத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­மைக்­காக அதி­கா­ரப் பகிர்­வுக்கு எதி­ரா­ன­வன் என்று என்னை யாரும் கரு­தி­வி­டக்­கூ­டாது.

இனப்­பி­ரச்­சி­னைக்­குத் தீர்­வாக அர­ச­மைப்­பின் 13 ஆவது திருத்த சட்­டம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்­பதே எனது நிலைப்­பா­டா­கும். எமது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இந்த நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளது.

அதனை அனை­வ­ரும் புரிந்­து­கொள்­ள­வேண்­டும். ஆனால் தமிழ் பேசும் மக்­க­ளின் பிரச்­சி­னைக்­குத் தீர்­வைப் பெற்­றுக்­கொ­டுக்­கும் செயற்­பா­டா­னது பெரும்­பான்மை சிங்­கள மக்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கையை ஊட்­டு­வ­தாக இருக்­க­வேண்­டும். மாறா­கச் சந்­தே­கத்தை தோற்­று­வித்­து­வி­டக்­கூ­டாது.

அர­ச­மைப்­பைத் தயா­ரிக்­கும் பணி­க­ளில் ஈடு­ப­டும் சிலர் செயற்­ப­டும் விதம் பெரும்­பான்மை மக்­கள் மத்­தி­யில் சந்­தே­கத்தை தோற்­று­விப்­ப­தாக அமைந்­தி­ருக்­கின்­றது என்­பதை அனை­வ­ரும் புரிந்­து­கொள்­ள­வேண்­டும். உண்­மை­யான அதி­கா­ரப்­ப­கிர்­வுக்­காக குரல்­கொ­டுக்­கும் நாங்­கள் தர்­ம­சங்­க­ட­மான நிலை­மைக்கு உள்­ளா­கின்­றோம் – என்­றார்.

வழி­ந­டத்­தல் குழு­வின் கடந்த அமர்­வில் நிபு­ணர் குழு சமர்­பித்த அறிக்­கையை மையப்­ப­டுத்தி நாடா­ளு­மன்­றில், தயா­சிறி சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தார். தற்­போது அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.

Previous Post

விளை­யா­டிக் கொண்­டி­ருந்த சிறு­வ­னுக்கு – எம­னாக மாறிய கயிறு!!

Next Post

வீதி­யில் கிடந்த உந்­து­ரு­ளி­யின் – உரி­மை­யா­ளர் கைது!!

Next Post

வீதி­யில் கிடந்த உந்­து­ரு­ளி­யின் – உரி­மை­யா­ளர் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures