Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்கள பௌத்த வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது

August 27, 2020
in News, Politics, World
0

பகுதி பகுதியாக திருத்தங்களை மேற்கொள்ளாது முழுமையான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தினார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான கெவிந்து குமாரதுங்க மற்றும் அனுப பெஸ்குவல் ஆகியோர் இன்று கொழும்பில் எல்லே குணவங்ச தேரரை சந்தித்தனர். இதன்போது, அரசியலமைப்பை பகுதி பகுதியாகக் கழட்டி, மீள பொருத்தி, திருத்த முயற்சிக்க வேண்டாம் என எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டார்.

“பூரண அரசியலமைப்பொன்றை நாம் உருவாக்க வேண்டும். அதில் பிரச்சினை இல்லை. சில சரத்துக்கள் உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும். 83 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியில் கலவரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அந்த ‘ஒற்றை’ என்ற சொற்பதத்தை அரசியலமைப்பிற்குள் நானே உள்ளடக்கினேன். ஆனால் அதுவும் வலுவானது அல்லவென தற்போது உணர்கின்றேன். ஆகவே, மரத்தின் கிளைகளைப் பாதுகாக்காமல் மரத்தின் வேரை பாதுகாப்பதற்கு திடசங்கற்பம் பூண வேண்டும் என உங்கள் இருவருக்கும் கூற விரும்புகிறேன். வேர் பாதுகாக்கப்பட்டால் கிளைகளும் பாதுகாப்பாக இருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “சிங்கள பௌத்த வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுமாறும் தேரர் கூறினார். இந்த நிலைமை ஏற்படக் காரணம் தேரர்களும் சிங்கள பௌத்த மக்களும் என நாட்டின் தலைவர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஸ கூறுகின்றார். அது வரவேற்கத்தக்கது. 48 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் அரச தலைவர் ஒருவர் முதற்தடவையாக அவ்வாறு கூறியுள்ளார்” என தேரர் சுட்டிக்காட்டினார்.

Previous Post

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம்

Next Post

இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Next Post

இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures