நாட்டில் 65 வீதம் சிங்கள பௌத்த மக்களுக்கு தாம் தான் ஆட்சி செய்ய வேண்டும் என ஒரு புறம் விஷம் ஏற்றப்பட்டிருக்கின்றது; மறுபுறம் தமிழர்களை தமிழ் கட்சிகள் தமிழ் தமிழ் என்று மடையனாக்கி கொண்டிருக்கின்றனர் என ஜே.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் நடேசன் சுந்தரேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தாமரைக்கேணியில் அமைந்துள்ள ஜே.வி.பி காரியலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெரல் அமைப்பு சர்வதேச மே 19 இயக்கம் என்றதை ஆரம்பித்து சகல கட்சி தலைவர்களையும் வரவழைத்து அதில் கைது செய்தவர்கள் கொலைகாரர்கள், கொள்ளையடித்தவர்கள், கடத்தல்காரர்கள், மோசடிக்காரர்கள் போன்றவர்களை கட்சிகள் வேட்பாளர்களாக நியமிக்க கூடாது என அங்கு வாக்குறுதியளித்தனர்.;
அதைத்தான் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் ஹல் தெரிவித்த கருத்தை ஒரு கட்சியினர் தூக்கி தொப்பியை போட்டுக் கொண்டு அவருக்கு எதிராக பேசுகின்றனர். அவர் யாருக்கும் பயப்பிடாமல் அஞ்சா நெஞ்சமாக கருத்து தெரிவித்தார் அவர் எமது கொள்கைகளுக்கும் கட்சிக்கும் அறிந்தே அறியாமலே நன்மையைச் செய்துள்ளார்.
இந்த கொரேனா வைரஸ் ஆபத்திலிருந்து நாட்டை கட்டியொழுப்ப வேண்டுமானால் சமுத்துவமான ஒரு பாதையின் தலைவன் வேண்டும் இல்லாவிட்டால் இதனை கட்டியொழுப்ப முடியாது எனவே இதனடிப்படையில் தான் நாம் இன்று பணிவுடன் மக்களை கேட்டுக் கொள்கின்றேன் எமது கட்சியை தெரிவு செய்யவும் இல்லாவிட்டால் நீங்கள் தொப்பி போட்டவர்களின் ஆட்சியில் தான் வாழவேண்டிவரும்.
ஒரு காலத்தில் ஈழம் பின்னர் சமஷ;டி, பின்னர் சுயாட்சி என கூறிவந்தவர்கள் மக்கள் உடைமையிழந்து. உயிரிழந்து மானமிழந்து மரியாதையிழந்து இருக்கின்றனர் அவர்கள் கேட்பது உரிமை என்று தெரிவித்தவர்கள் இன்று அதனை முற்றாக மறந்து 700 ரூபா பெறுமதியான ஒரு செப்பிங் பையில் தான் அடங்கிருக்கின்றதாக வீடுவீடாக சென்று கொடுக்கின்றனர். மக்கள் செப்பிங் பையை கேட்கவில்லை
முட்டுக் கொடுத்த காலங்களிலே முட்டை இழுத்துவிட்டால் ஜக்கிய தேசிய கட்சியின் வாழ்வே முடிந்திருக்கும். ஆனால் கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்துவதற்கான சிறிய வர்த்தமானியை கூட பிரசுரிக்க முடியாதவர்கள் அவ்வாறே மட்டக்களப்பில் இடைநடுவில் கைவிடப்பட்ட வாசிகசாலையை கட்டுவதற்கு தனக்கு பணம் வந்துள்ளதாக முன்னாள் பாருhளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்தது எனவே அதற்கு வந்த பணம் எங்கே?
மண்கொள்ளை நடந்து கொண்டிருக்கின்றது இதற்கு எதிர்த்து பல இடங்களில் போராட்ங்களை நடத்திக் கொண்டிருப்பவன் நானும் எமது விவசாய சங்கமும் முன்னர் இருந்த அரசாங்க அதிபர்; மா. உதயகுமார் கூட்டத்தை நடாத்தினார் அதனைக் கூட அவர் நிறைவேற்றவில்லை ஆகவே இந்த மாபியாவின் கீழ் ஆட்சியாளர்களா? ஆட்சி செய்கின்ற உத்தியோகத்தர்களா ? மேலதிகாரிகளா? யார் இதற்கு பெறுப்பு யார் இதை செய்வது
விவசாயிகளை ஏமாற்றுவதற்கென்றே திணைக்களங்கள் இருக்கின்றன உரிய நேரத்தில் உரம் வழங்கப்படவில்லை விவசாய நிலங்கள் படுகுழியாக்கப்படுகின்றன கருணா அம்மான், பிள்ளையான், வியாழேந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்லோரும் இருந்திருக்கின்றார்கள் இத்தனை காலமும் ஏமாற்றி இருக்கின்றார்கள் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் ?
தாங்கள் அதிகாரத்தில் இருந்தபோது எந்துவெரு காரியத்தையும் திறம்பட செய்ய முடியாதவர்கள் மீண்டும் மீண்டும் வாக்கு கேட்கின்றார்கள் என்றால் குட்டக் குட்ட குட்டுறவன் மடையன் என்பதை மக்கள் தீர்மானிக்கவும். நாங்கள் தேசிய ஓற்றுமையை காட்டுவதற்கு தமிழர்கள் முஸ்லீம் சிங்களவர் என மூவினத்தவரும் இந்த தேர்தலில் குதித்துள்ளோம். சமுத்துவமான அடிப்படையில் செயற்படுகின்றோம் தவறவிட்டால் பிற்காலத்தில் அனுபவிக்க வேண்டிவரும் என பீட்டோவின் கொள்கையை ஞாபகப்படுத்துகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

