Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்கள பேரினவாத தேரருக்கு 19 வருட சிறைத்தண்டனை

August 8, 2018
in News, Politics, World
0
சிங்கள பேரினவாத தேரருக்கு 19 வருட சிறைத்தண்டனை

சிங்கள பேரினவாத தேரரான பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகளில் அனுபவிக்கும் படி 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்ன ஆகியோரால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசார தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, அவருக்கு 19 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, அந்த தண்டனையை ஆறு ஆண்டுகளில் அனுபவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதன் காரணமாக ஞானசார தேரர் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை, உடனடியாக சிறைச்சாலை பொறுப்பில் எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, ஞானசார தேரர் சிகிச்சைபெறும் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு நீதிமன்ற அதிகாரிகள் சிலர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இரு இராணுவ வீரர்களுக்கு மரண தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

பாரிய இழப்பு ஏற்பட்ட துயரத்தை மனதில் உணர்ந்தேன்- இரங்கல் செய்தியில் சம்பந்தன்

Next Post

பாரிய இழப்பு ஏற்பட்ட துயரத்தை மனதில் உணர்ந்தேன்- இரங்கல் செய்தியில் சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures