Sunday, September 7, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சிங்கப்பூரில் வாள்வெட்டு | தாக்குதலை தடுத்து நிறுத்திய இலங்கையர் கௌரவிப்பு

March 17, 2022
in News, Sri Lanka News
0
சிங்கப்பூரில் வாள்வெட்டு | தாக்குதலை தடுத்து நிறுத்திய இலங்கையர் கௌரவிப்பு

சிங்கபூரில் வாள் வெட்டு தாக்குதல் நடத்திய நபரை தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்த இலங்கை பிரஜை  கௌரவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குமாரபேலி ஆராச்சிகே அமில சிந்தன என்ற 35 வயதான இலங்கை  பிரஜை கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு  சிங்கபூரில் புவாங்கொக் கிரசன்ட்  பகுதியில் வீதியை கடக்க வீதி சமிஞ்சை அருகில் நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அங்கு வாளுடன் வந்த நபர் அமில சிந்தனவை தாக்கினார். உடனே அமில சிந்தன குறித்த நபர் தன்னை தாக்குவதை தடுத்தார்.

அவ்வேளை இருவரும் கீழே விழ அருகிலிருந்த  மற்றொருவர் சென்று வாள்  தாக்குதலை நடத்திய நபரை மடக்கி பிடித்தனர்.

அமில சிந்தனவிற்கு இடது தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் காயங்கள் இருந்தபோதிலும், பொலிஸ் வரும் வரை மற்றையவர்களுடன் சேர்ந்து குறித்த நபரை பிடித்து வைத்திருந்தனர்.

பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வாள் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர்.

சிங்கப்பூரில் டெவிநியோக சேவை நிறுவனத்தை வைத்திருக்கும் சிந்தன கூறுகையில்,

“அவர் என்னை நோக்கி ஓடி வந்து மூன்று முறை சரமாரியாக வாளால் வெட்டினார். எனக்கு மூன்று காயங்கள் ஏற்பட்டன.

இடது தோள்பட்டையில் 10 சென்றி மீற்றர் நீளமான வெட்டுக்காயம், அதேபோல் எனது இடது கை மற்றும் கழுத்துக்கு கீழே உள்ள பகுதியில் மேலோட்டமான காயங்கள் ஏற்பட்டன.

தரை வழுக்கும் தன்மையாக இருந்தமையால் கீழே அவர் விழுந்ததால் எனக்கு அதிஷ்டமாக இருந்தது. நான் அவருடைய இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு அவரை இறுகப் பிடித்துக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

வாள்வெட்டை மேற்கொண்ட 37 வயதான நபர் வாளுடன் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மாத்திரைகளை உட்கொண்டதாக  பொலிஸாரின் ஆரம்க கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவரது குடியிருப்புப் பகுதியில்  பொதுமக்களுடன் வாக்குவாதத்திற்குப் பின்னர், அவர் வீதியில் குறுக்கே நடந்து சென்று, அந்த வாளை பயன்படுத்தி ஐந்து கார்களை தாக்கியதாக சிங்கப்பூர் பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டு  தாக்குதலை மேற்கொண்ட நபரைக் கட்டுப்படுத்த உதவியதற்காக செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) சிங்கப்பூர் பொலிஸாரிடமிருந்து பொது உணர்வுக்கான விருதுகளைப் பெற்ற ஆறு பேரில் அமில சிந்தனையும் உள்ளடங்குகிறார்.

குமாரபேலி ஆராச்சிகே அமில சிந்தன, லிம் ஜுன் யீ, முஹம்மது நூர் ரப்பானி மொஹமட் ஜைனி, லிம் ஜியாஜிங், முஹம்மது நௌஃபல் அஹ்மத்சுப்ரோண்டோ மற்றும் திருமதி கெர்வின் கோ ஆகிய ஆறு பேருக்கும் செவ்வாய்க்கிழமை (15) பிற்பகல் அங் மோ கியோ பொலிஸ் பிரிவின் தலைமையகத்தில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஜாவா லேன் | கலம்போ எவ் சி

Next Post

இந்திய கபடி வீரர் சுட்டுக்கொலை

Next Post
இந்திய கபடி வீரர் சுட்டுக்கொலை

இந்திய கபடி வீரர் சுட்டுக்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures