வைத்தியர் சாபி சிஹாப்தீன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீண்டும் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் மேற்கொண்ட சத்திர சிகிச்சையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தாய்மார்கள் மற்றும் குருணாகல் வைத்தியசாலை நிருவாக சபை உறுப்பினர்கள் ஆகியோரிடமே இந்த வாக்குப் பதிவுகள் பெறப்படுவதாகவும் இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
வைத்தியர் சாபி சிஹாப்தீன் தொடர்பான வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி குருணாகல் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

