Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சாந்தன்; விடுதலைப் புலிப் போராளியா? சகோதரன் மதிசுதா விளக்கம்

March 6, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சாந்தனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விடுவிக்குக | தமிழ்தேசிய மக்கள் முன்னணி

சின்னண்ணாவி (சாந்தண்ணாவின்) சில உண்மைகள் – (I)

மறைக்கப்படும் மற்றும் திரிபுபடுத்தப்படும் வரலாறுகளை, மற்றவர்க்கு பாதிப்பற்ற வண்ணம் சொல்ல வேண்டிய கடமையானது குடும்ப உறுப்பினரான எனக்கு என்றும் உண்டு.

இத்தகவல்கள் அவரிடம் நேரடியாகவும், பொ.அம்மான் மூலமாகவும், அவரது சக போராளிகளூடாகவும் பெறப்பட்டதுடன் நான் குறிப்பிடுபவை நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டவை மட்டுமேயாகும்.

1) உடுப்பிட்டி அமெரிக்கன் மிசனில் 1988 ம் ஆண்டு உயர்தர பிரிவில் கற்கும் காலத்திலேயே பாடசாலைக் காலத்தில் இந்திய இராணுவத்துக்கு எதிரான பல தாக்குதல்களை திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறார். அத்தாக்குதல்களை நடைமுறைப்படுத்திய அண்ணாக்களாக (சலாம் , டேவிட், கோபு, அர்ஜுணா, ரகுவரன், நீலன் இன்னும் பலர்)

2) உயர்தர பரீட்சையின் பின் நேரடிப் போராளியாக பணியாற்றியிருக்கிறார்.

3) வணிகவியல் உயர்கல்விக்காக படகு மூலம் இந்தியா சென்றவர் தனக்களித்த பணியாக EPRLF அலுவலகத்துக்கு முன் வீட்டில் வாழ்ந்ததுடன் பத்மநாபா அவர்களின் மரணத்திற்கு முதலே நாடு திரும்பியிருக்கிறார். இத்திட்டமிடல் தொடர்பாக அல்பிரட் துரையப்பா முதல் காமினி திசாநாயக்கா வரை என்ற தொடரில் அற்புதன் அவர்களால் கால ஆதாரங்களுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

பத்மநாபா கொலை வழக்கு தொடர்பாக இடம்பெற்ற வழக்கில் சாந்தன் அவர்களுக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் விதித்திருந்தது.

4) இலங்கை திரும்பியவர் “தினேஷ்” என்ற பெயரில் முழுத் தீவுகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். தீவுகளில் மக்களுக்கு அவர் செய்த பணிகள் பற்றி , அவரது இறுதி அஞ்சலிக்காக தீவில் இருந்து திரண்ட மக்கள் பல கதைகள் பேசினார்கள்.

5) 1991 ம் ஆண்டு இந்தியா சென்று கிட்டு அண்ணாவுக்கு பதிலாக இலண்டனில் தங்கி பணி செய்து கொண்டு அவரை தாயகம் திரும்ப வைத்தல் என்ற நோக்குடன் அனுப்பப்பட்டார்.
இலங்கை இந்திய இராணுவத்தின் மிக நெருக்கடியான காலத்திலும் அத்தனை போராளிகளுக்கும் உணவு தயாரிப்பதுடன் மறைமுக அரணாகவும் இருந்த எமது இல்லத்தை கல்வீடாக மாற்றுவதற்கு சீமேந்து பைகள் அளித்ததுடன் அதை குடிபூர்ந்து வைக்க வந்த பொ.அம்மான் அவர்கள் குறிப்பிட்டது “நீங்கள் எங்களுக்குச் செய்த தியாகம் போதும் அவனை நாங்கள் ஒரு வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் அவன் உங்கள் குடும்பத்தை பார்க்கட்டும்.” என்பதுடன் அப்பாவை புலனாய்வுத்துறையின் வாகனங்களுக்குரிய பொறுப்பாளராகவும் நியமித்தார்.

பிற்காலத்தில் மல்லாவி வரும்போதெல்லாம் அம்மாவிடம் ஒரு பிடியாவது வாங்கி உண்டு செல்லும் அம்மான் மேற்குறிப்பிட்ட உண்மையை கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிவராசண்ணாவின் பணத்தை கையாண்டதைத் தவிர இவர் சம்மந்தப்படவில்லை. குண்டுச் சாந்தனின் குற்றச்சாட்டுக்களை சாந்தன் மேல் போட்டேன் என விசாரணை அதிகாரியே பகிரங்கமாக கூறி வருத்தம் தெரிவித்திருந்தார்.

தூக்கத்தில் வைத்து கைது செய்யப்படும் போடும் சயனைட் உட்கொள்ள முற்பட்ட வேளையே சாந்தனை பொலிசார் தடுத்து காப்பாற்றியிருந்தனர்.

Previous Post

வெளிநாட்டு மோகத்தால் பாதிப்படையும் தமிழர்கள்! வடக்கு கிழக்கு மக்களை சுட்டிக்காட்டும் அலிசப்ரி

Next Post

கேரள கஞ்சாவுடன் மாசார் பகுதியில் இளைஞன் கைது!

Next Post
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

கேரள கஞ்சாவுடன் மாசார் பகுதியில் இளைஞன் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures