Friday, August 29, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

சாதாரண தர பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

November 26, 2018
in News, Politics, World
0

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடைகளை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான தடை உத்தரவை மீறியிருந்தால் 1911 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

நாடாளவிய ரீதியில் இம்முறை 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இப்பரீட்சையானது 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன் பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும் 33 பிராந்திய நிலையங்களாக கொண்டு பரீட்சை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

மாத்தறை கொலை சம்பவம் – பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

Next Post

இன்று இரவு செவ்வாயில் கால் பதிக்கிறது நாசாவின் இன்சைட் விண்கலம்

Next Post

இன்று இரவு செவ்வாயில் கால் பதிக்கிறது நாசாவின் இன்சைட் விண்கலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures